பாட்னா:
ஐக்கிய ஜனதா தள லோக்சபா தலைவரும், எம்.பி.யுமான சரத்யாதவ் பீகார் மாநிலம் சோனேப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் இருப்பது ‘சர்காரி’ ஜனதா தள். ம க்கள் இருப்பது தான் ஐக்கிய ஜனதா தள்’’ என்றார்.
முன்னதாக அவர் பாட்னா விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘நான் தற்போதும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடனான மெகா கூட்டணியில் தான் இருக்கிறேன். இது மாநில ம க்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி’’ என்றார்.
சரத்யாதவ் விமானநிலையம் வந்த போது நிதிஷ்குமார் ஆதரவு கட்சியினரிடம் இருந்து விலகியே இருந்தார். அதோடு சரத்யாதவ் தனது நிகழ்ச்சி விபரங்களை ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளுக்கு தெரியாமல் ரகசியம் காத்திருந்தார்.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பஷிஸ்த் நாராயண் சிங் கூறுகையில்,‘‘ சரத் யாதவ் தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கட்சியினரை தவிர்ப்பதை ஒன்றும் சொல்ல முடியாது. அதே சமயம் தொகுதிக்கு வெளியே அவர் அவ்வாறு தவிர்த்தால் அது கட்சி விரோத நடவடிக்கையாகும்’’ என்றார்.
சரத்யாதவை விமானநிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள மாநில தலைவர் ராம்பதன் ராய் மற்றும் அ க்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். 3 நாள் சுற்றுப் பயணமாக வந்து சரத்யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவு பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.
‘‘அடுத்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற வேண்டும் என்று சரத்யாதவ் விரும்புகிறார். எனினும் ஐக்கிய ஜனதா தளத்தில் அவர் நீடித்தால் சிறிதளவு மட்டுமே பயன் கிடைக்கும்’’ என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏ.க்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது. இது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் விரைவில் பீகார் வருகை தரவுள்ளார். அவர் எம்எல்ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வரும் 27ம் தேதி லாலு தலைமையில் எதிர்கட்சியினர் கலந்துகொள்ளும் பேரணி பாட்னாவில் நடக்கிறது. இந்த பேரணி நிதிஷ்குமார் விலகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதாகும்.
இந்த பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வது விரைவில் உறுதி செய்யப்படவுள்ளது. இதில் பிஎஸ்பி தலைவர் மாயாவதியும் கல ந்துகொள்வார் என்று லாலு நம்பிக்கையுடன் உள்ளார்.