பாட்னா:

பீகார் மாநிலம் மோதிகாரி சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறிய அந்த பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்சில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பஸ் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் மீட்டு பணி தடைபட்டத்து. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

27 பேரில் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.