அட்லீ இயக்கத்தில் , விஜய் , நயன்தாரா நடிக்கும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளது
விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மற்றும் செகண்ட்லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று மாலை 6 மணிக்கு புதிய வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். அதில், ‘டீசர், ட்ரெய்லர், சிங்கிள், ஆடியோ ரிலீஸ் தேதி, படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் கிடையாது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். என்னவென்று யோசியுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.