அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது. அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது.