பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த டுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay of Life Surfing School மூலம் கற்றுக்கொண்டு கடல் அலைகளுடன் மோதி விளை யாடி வருகிறார். இப்போது இவரைப் பார்த்து இன்னும் சில பெண்கள் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சினிமா வில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தான் ஒரு சிங்கப்பெண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி ரெட்டி.

[youtube-feed feed=1]