பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.

பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் போட்டியாளராக கானா இசைப்பாடகி இசைவாணியை அறிமுகப்படுத்திய கமல்,

அடுத்ததாக இரண்டாவது போட்டியாளராக உதவி இயக்குநர் மற்றும் நடிகர் ராஜு ஜெயமோகனை அறிமுகப்படுத்தினார். ராஜு வேறு யாருமல்ல, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தியாக நடித்து வருபவர் தான்.

மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா களமிறங்கியுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடைய மதுமிதா, தமிழ் பொழுதுப்போக்கு துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறினார்.

4-வது போட்டியாளராக இணையப் பிரபலம் அபிஷேக் ராஜா அறிமுகப்படுத்தப்பட்டார். நிறைய நேர்க்காணல்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அபிஷேக், நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் 5-வது போட்டியாளராக திருநங்கை நமீதா மாரிமுத்து களமிறங்கியிருக்கிறார். கல்லூரி 3-ம் ஆண்டு படிக்கும் போது, வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா அதன் பின்னர் படிக்க முடியவில்லை என்றார். பின்னர் ஆபரேஷன் முடித்து பல போராட்டங்களுக்குப் பிறகு தனது பெற்றோர் தன்னை ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

ஆறாவது போட்டியாளராக விஜய் டிவி பிரியங்கா கலந்துக் கொண்டுள்ளார். தனக்கென பெரிய லட்சியம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட பிரியங்கா, எல்லாமே குறைந்த கால டார்கெட் தான் என்றார். அப்படி இருக்கும் பக்கெட் லிஸ்டில் ஒன்று பிக் பாஸ் செல்வது என்றும் குறிப்பிட்டார்.

7-வது போட்டியாளராக அபினய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராமனுஜராக நடித்திருந்தார். தற்போது விவசாயம் செய்ய முடியாத ஏழைகளின் நிலங்களை லீஸிற்கு எடுத்து, அதில் உரிமையாளர்களையே வைத்து தான் விவசாயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

8-வது போட்டியாளராக சின்னத்தம்பி சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி அறிமுகப்படுத்தப்பட்டார். சராசரி பெண்ணாக 23 வயதில் திருமணம் செய்துக் கொண்டு, கணவர், குழந்தை என வாழ வேண்டும் என நினைத்த பாவ்னிக்கு, அது தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிட்டார். தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் குறிப்பிட்டு, திருமண வாழ்க்கையில் தனக்கு ராசியில்லை என்றார்.

இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் கடந்து வந்த கடினமான நாட்களை நினைவுக்கூர்ந்தார். கொரோனா சூழலால் மற்ற கலைஞர்களைப் போல தானும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மலேசியா மாடலான பிக்பாஸ் வீட்டினுள் 10வது போட்டியாளராக நடியா சாங் செல்கிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது.நான் 14வது வயதிலிருந்து வேலை செய்கிறேன். என்னுடைய பில்லரே எனது கணவர் தான் என்று பகிர்ந்துக்கொண்டார் நடியா சாங் பகிர்ந்துக்கொண்டார்.

11வது போட்டியாளராக வருண் செல்கிறார். நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தொழிலதிபர் ஐசரி கணேசின் மருமகன் தான் நடிகர் வருண். ஏ.எல் விஜய்யுடன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர், தளபதி விஜய்யின் மெகா ஹிட் திரைப்படமான தலைவாவில் விஜய்யின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

12வது போட்டியாளராக நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி செல்கிறார். சின்ன வயதிலிருந்தே எனக்கு கஷ்டம் தான். தினமும் யாரையாவது சிரிக்க வைக்கணும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்படி சிரிக்க வைக்கும் போது தான் ஒருவர் என்னிடம், இங்க பண்றத சென்னையில போய் பண்ணு என்று கூற, நானும் சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். ஆனால் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

13வது / 14வது போட்டியாளராக மாடல் சுருதியை பிக் பாஸ் மேடையில் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல் ஹாசன். ஸ்ருதி இங்கே என்றால் அக்‌ஷரா எங்கே எனக் கேட்கிறீர்களா? என்றவாறு மற்றொரு மாடல் அக்‌ஷரா ரெட்டியை மேடைக்கு அழைத்தார்.

15வது போட்டியாளராக தமிழ் ரேப் இசைக்கலைஞர் ஐக்கி பெர்ரி போட்டியாளராக களமிறக்கப்பட்டார். தஞ்சையை சேர்ந்த ஐக்கி, தான் ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மருத்துவரான இவர், இசை மீது கொண்ட காதலால், இண்டிபெண்டென்ட் ரேப் பாடகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

16வது போட்டியாளராக தாமரை செல்வி செல்கிறார்.பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார்.நான் கிட்டத்திட்ட 22 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால் இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்கு தான் வருவேன் என்று கூத்து கலைஞர்களின் கஷ்டத்தை பகிர்ந்துக்கொண்டார்.

17வது போட்டியாளராக சிபி வீட்டிற்குள் செல்கிறார். நான் நல்ல சம்பளம் வர வேலைய விட்டுட்டு சினிமாவில் நுழைந்தேன். மாஸ்டர் படம் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு எனக்கு தெரியல. ஒரு விஷயத்த செய்றத்துக்கு முன்னாடி பல தடவை யோசிப்பேன், ஆனால் செய்ய ஆரம்பித்த பின்பு யோசிக்கமாட்டேன் என்று சிபி கூறினார்.

18வது போட்டியாளராக நிரூப் வீட்டினில் செல்கிறார்.நான் அடுத்தவங்களுக்காக எதாவது பண்ணனும்னு நினைச்சேன். பிக்பாஸ்னால என்னால மாற்றத்த கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் என்று சிபி பகிர்ந்துக்கொண்டார் .