பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

சுரேஷ் சக்கரவர்த்தி பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார்.

இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.

நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் குக்காக பயணித்த அனுபவத்தை பகிர்ந்தார்.

இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் ஆண்டவர் (கமல் ஹாசன்) போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது.. நன்றி தலைவரே என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ரிமென்ட்டை காட்டி விஜய் டிவி உங்களை மிரட்டியதா தாத்தா? என்று கேட்டு வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]