கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது

சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை.சீரியல்கள் படப்பிடிப்பு இல்லாமல் புதிதாக எதை ஒளிபரப்புவது என்ற குழப்பத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் ஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ கடைசி சீசனின் ஒரு பகுதியை மட்டும் இன்று (மார்ச் 30) மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பியுள்ளது விஜய் டிவி. இதற்கான ப்ரோமோவை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

[youtube-feed feed=1]