டில்லி:

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளதை தொடர்ந்து,  மானியமில்லாத சிலிண்டர் விலை நூறு ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் மானிய சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

இந்தியாவில் மானிய விலை சிலிண்டர் மற்றும் மானியமில்லாத சிலிண்டர் என இருவகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இவற்றின் விலையும், பெட்ரோல், டீசல் விலைகளே போலவே தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மானியமில்லாத சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.100.50 காசு குறைக்கப் படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.737.50 ஆக விற்கப்பட்டு வந்த நிலையில், இன்றுமுதல் ரூ.637 ஆக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.608.50 காசு என்றும், கொல்கத்தாவில் ரூ.662.50 காசு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல மானிய சிலைண்டர் விலையில் ரூ.3 மட்டுமே குறைந்துள்ளது. சென்னையில் ரூ.497.37 ஆக விற்கப்பட்ட மானிய விலை சிலிண்டர்  இன்றுமுதல் ரூ.494.35 ஆக விற்பனையாகி வருகிறது.

டில்லி மற்றும் மும்பையில் ரூ. 494.35, கொல்கத்தாவில் ரூ.49747 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை வீழ்ச்சி காரணமாக  இந்த விலை குறைவு செய்யப்பட்டி ருப்பதாக  எரிவாயு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.