கடந்த வாரம் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகிய ஐவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.

இதில் ஆஜீத் குறைவான வாக்குகள் வாங்கியதாகவும் இதையடுத்து அவரிடம் உள்ள எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து அவர் காப்பாற்றப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

மாஸ்க் டாஸ்க் இந்த வாரம் அரசன்-அரக்கன் என்பது போல விளையாட்டு இருந்தது. பிடித்த நபர்களை ராஜாவாகவும், பிடிக்காத நபர்களை அரக்கனாகவும் தேர்வு செய்ய வேண்டும். சமீப காலமாக பாலாஜியிடம் நட்பு பாராட்டும் சனம் அரசன், அரக்கன் இரண்டையும் பாலாஜிக்கே அளித்தார். இனிமேல் சண்டை போட மாட்டேன் என பாலாஜி சத்தியம் செய்திருக்கிறாராம். இதையும் சனமே கமலிடம் எடுத்துரைத்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் நவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுத்திருக்கிறது விஜய் டிவி. இதுவரை பிக்பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்று 6 :30 மணியிலிருந்து பிக்பாஸ் ஒளிபரப்பப்படுகிறது.


இன்று மனதிற்கு மகிழ்ச்சியான நல்ல கண்டென்டுகளை பார்க்கலாம் என்று நினைத்தால் பாலாவின் போட்டோவை ரியோ எரிப்பதும், ரியோவின் போட்டோவை பாலா எரிப்பதும் என இன்னைக்கும் சண்டையா இருக்கும் போல இருக்கிறது.

[youtube-feed feed=1]