வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக, இஸ்ரேல் நாட்டின் தூதரை மாற்றி உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் ஜோ பைடன், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார் என அவரது உதவியாளர்கள் வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்திருந்தனர். அதன்படி, டிரம்பால் சீர் குலைக்கப்பட்ட உலக நாடுகளுடனான உறவு, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குடியேற தடை , இரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சாட், வடகொரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எச்1பி விசா உள்பட பல நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று பதவி ஏற்றதும், முதல் நடவடிக்கையாக, இஸ்ரேல் நாட்டிற்கான தூதரை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை “இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசாவிற்கான அமெரிக்க தூதராக” மாற்றி உள்ளது. இந்த பகுதிகளின் எந்த பகுதிகளையும் இஸ்ரேலிய பிரதேசமாக பைடன் கருதவில்லை என்பதை அவரது நடவடிக்கை காட்டுவதாகவும், இது புதிய கொள்கை மாற்றத்திற்கான சமிக்ஞை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நாளில் பைடன் எடுத்த நடவடிககைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]