திம்பு

சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக்  ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் மத்திய  அமைச்சரவையில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.   குறிப்பாக கடந்த அமைச்சரவையில் 2014 முதல் 2019 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணி புரிந்த போது பல நாட்டினரின் மரியாதையையும் மதிப்பையும் அவர் பெற்றுள்ளார்.   மாரடைப்பு காரணமாக சுஷ்மா ஸ்வராஜ் மரணம் அடைந்ததால் பல நாட்டினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்டை நாடான பூட்டான் நாட்டில் அவர் மறைவு கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.   டில்லியில் நடந்த சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச் சடங்கில் பூட்டன் பிரதமர் டிஷெரிங் தோபா கலந்துக் கொண்டார்.   அத்துடன் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் தனது இரங்கல்  செய்தியை சுஷ்மா ஸ்வராஜின் குடும்பத்துக்கு அளித்துள்ளார்.

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் நினைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் விசேஷ பூஜைகள் நடத்தி உள்ளார்.  அத்துடன் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி மன்னர் பிரார்த்தனை செய்துள்ளார்.   நாடெங்கும் அவருக்காகச் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன.