புலந்த்ஷகர்
புலந்த்ஷகரில் நடந்த வன்முறை சம்பவக் குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வந்ததையொட்டி மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலந்த்ஷகர் பகுதியில் கடந்த வருடம் சட்டவிரோதமாக பசுக்களை கொலை செய்ததாக கூறப்பட்டு அந்தப் பகுதியில் கடும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் ஒரு சிலரால் வன்முறைக் கலவரமாக மாற்றப்பட்டு காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இந்த வன்முறையில் காவல்துறை அதிகாரி சுபோத் குமார் மற்றும் காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் மரணமடைந்தனர்.
இந்த வன்முறையை நடத்தியவர்கள் என 44 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. 44 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபபடனர். கைது செய்யப்பட்ட 44 பேரில் ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை வரவேற்க ஒரு பெரிய கூட்டம் சிறை வாசலில் காந்த்திருந்தனர்.
ஜாமினில் விடுதலை ஆகி வந்த ஜீது ஃபவுஜி, ஸ்ரீகர் அகர்வால், உபேந்திர சிங்,ராகவ, ஹேமு, சவுரவ் மற்றும் ரோகித் ஆகியோரை கூடி இருந்தவர்கள் கட்டித் தழுவி வரவேற்றுள்ளனர். அத்துடன் மாலை மரியாதைகளும் தரப்பட்டுள்ளனர். அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களை வரவேற்க பாரத் மாதா கி ஜெய் எனவும் ஜெய்ஸ்ரீராம் எனவும் குரல் எழுப்பி உள்ளனர்.