வாரனாசி:

வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஈவ் டீசிங் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 21ம் தேதி முதல் மெயின் நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் சிலர் நேற்றிரவு துணைவேந்தர் இல்லத்துக்கு மாணவர்கள் திரண்டு சென்றுள்ளனர். அப்போது பாதுகாவலர்கள் சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்ததால் கல்வீச்சு மற்றும் மோதல் உருவாகி வன்முறையாக மாறியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் மாணவிகள் உள்பட சில மாணவர்களுக்கும், 2 பத்திரிக்கையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இ ச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வாரனாசி வந்து சென்ற சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரச்னை பெரிதாகி வருவதால் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வாரனாசி போலீஸ் கமிஷனருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து வரும் அக்டோபர் 2ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட் டுள்ளனர்.