வாரணாசி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை இஸ்லாமியப் பேராசிரியர் பிரோஸ் கான் எதிர்ப்பு காரணமாகத் தனது துறையில் இருந்து ராஜினாமா செய்து கலைத் துறையில் இணைந்துள்ளார்
பனாரஸ் இந்து பலகலைக்கழகத்தில் உள்ள சமஸ்கிருதத் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. அந்த துறையில் இஸ்லாமியரான பிரோஸ் கான் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதற்கு பல மாணவர்கள் குறிப்பாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ பி வி பி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏபிவிபி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பு தொடர்ந்து பிரோஸ் கானை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்தன. சமஸ்கிருத பாடட்தை இஸ்லாமியர் நடத்தக் கூடாது எனவும் இந்துக்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து போராடினர்.
பிரோஸ்கானுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஆதரவு தெரிவித்த போதிலும் அவரால் வகுப்புக்களை எடுக்க முடியாத அளவுக்குப் போராட்டம் தொடர்ந்தது. எனவே அவர் சமஸ்கிருதத் துறையில் இருந்து விலகிக் கலைத் துறையில் பேராசிரியராகப் பணி புரியத் தொடங்கி உள்ளார். கலைத்துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு அவர் சமஸ்கிருத பாடம் எடுக்க உள்ளார்.