க்னோ

உத்தரப்பிரதேச இடைதேர்தாலில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவா பாஜக சார்பில் போட்டி இடுகிறார்.

வரும் 23 ஆம் தேதி அன்று திரிபுரா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.  மேலும் உத்தரபிரதேச மாநிலம் அஸம்கர், ராம்பூர் ஆகிய இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இரு தொகுதிகளின் எம்பியாக இருந்த அகிலேஷ் யாதவ், அசம்கான் ஆகியோர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதையொட்டி அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலையொட்டி பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில் அஸம்கர் தொகுதியில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவாவும், ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்சி கன்ஷ்யாம் லோதியும் போட்டியிடுகின்றனர்.

பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட இரு வேட்பாளர்களும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.