கொச்சி,

டிகை பாவனாவின்  பாலியல் துன்புறுத்தல் புகார் காரணமாக, கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தியது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிடம் இன்று இரண்டாவத  நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கருப்புப்பண கும்பலுடன்  திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]