சென்னை:
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக விழுப்புரம், கடலூர், தஞ்சாபூர் மாவட்டங்களில் சுமார் 22 கோவில்கள் இடமாற்றம் செய்ய வேண்டியது இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாரத்மலா பிரயோஜன திட்டத்தின் கீழ் 2,450 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்களை சீராக செயல்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
மேலும், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள தஞ்சாவூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் குறைந்தது 22 கோயில்கள் இடமாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ள. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், தமிழகஅரசு அதற்கான உத்தரவை வழங்கி உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) தெரிவித்துஉள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்ரவண்டி மற்றும் தஞ்சாவூர் இடையே 165 கி.மீ.-தேசிய நெடுஞ்சாலை 36 (பழைய என்.எச் 45 சி) மூன்று கட்டங்களாக அமைக்கப்பட்டன, சென்னை-கொல்கத்தா என்.எச் 5 இன் சென்னை-தடா பிரிவின் ஆறு வழிப் பாதைகள் தாமதமாகி உள்ளது. மேலும், கோயில்கள் மற்றும் பிற ‘மத கட்டமைப்புகள்’ சாலை திட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதாக NHAI அதிகாரிகள் தெரிவித்தனர். “
மொத்தம் 22 கோவில்கள் மூன்று பெரிய சாலைத் திட்டங்களுக்குத் தடையாக உள்ளன. அண்மையில் நடந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை முதன்மைச் செயலாளருடன் (எஸ்.கே.பிரபாகர்) நாங்கள் பிரச்சினையை எழுப்பியுள்ளோம். அவற்றை இடமாற்றம் செய்து நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எங்களுக்கு உறுதியளித்தார் என்று கூறியுள்ளனர்