
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார்.
அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
”திரை வாழ்க்கையில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும்,சமூக மாற்றத்திற்கான கருத்துக்களைத் தான் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து, நிஜ வாழ்க்கையில் தான் கொண்ட கொள்கையில் நேர்மையுடனும் என்மீது பேரன்பு கொண்ட சின்னக்கலைவாணர் திரு.விவேக்அவர்களின்மறைவு அதிர்ச்சளிக்கிறது. திரைத்துறைக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்”
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]திரை வாழ்க்கையில்
மூட நம்பிக்கைக்கு எதிராகவும்,சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை தான் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களைமகிழ்வித்து, நிஜ வாழ்க்கையில் தான் கொண்ட கொள்கையில்நேர்மையுடனும் என்மீது பேரன்பு கொண்ட சின்னக்கலைவாணர் திரு.விவேக்அவர்களின்மறைவு அதிர்ச்சளிக்கிறது. pic.twitter.com/ZRcinuXYHZ— Bharathiraja (@offBharathiraja) April 17, 2021