சென்னை
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக தற்போது விக்ரமன் பதவியில் உள்ளார். மூன்று முறை தலைவராக உள்ள இவருடைய பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.
அடுத்த தலைவரை தேர்வு செய்வது குறித்து சங்கத்தின் கூட்டம் வடபழனியில் நடந்தது.
இதில் சங்கத்தை சேர்ந்த பல இயக்குனர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பாரதிராஜா அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுளார். இதற்கான தீர்மானம் இன்று நடந்த 95 ஆம் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்ததை ஒட்டி தேர்தல் இன்றி பாரதிராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel