இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜன.18ம் தேதி நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா இந்துக் கடவுள்களை அவமதித்து பேசியதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன. இந்தப் புகார் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “ பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.