சண்டிகர்: பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான். நாளை மாநில கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி. 92 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக முதன்முதலாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான், கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, சண்டிகர் திரும்பியவர், நாளை பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக கூறினார்.  முன்னதாக இன்று மாலை பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.