fake university
 
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிதி இரானியின் கணக்குப்படி இந்தியாவில் 22 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
ugc 2 பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956 22(1)ன் படி, மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், சட்டப்பிரிவு 3ன் கீழ் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டு சட்டவிதி 22(3)ன் கீழ் யுஜசி பாடத்திட்டத்தின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் போன்றவை மட்டுமே பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 
ugc 1யுஜிசி 23வது சட்டபிரிவின்படி மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் அல்லாத எந்த ஒரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையினை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் யுஜிசி விதிமுறைகளை மீறி தங்களை பல்கலைக்கழகம் என அறிவித்திருக்கும் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்பட நாடுமுழுவதும் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எந்தவித டிகிரி படிப்பையும் நடத்த உரிமையில்லை என அறிவிக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய பல்கலைக்கழகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில்  09, டெல்லியில்  05, மேற்கு வங்காளத்தில் 02, பீகாரில் 1, கர்நாடகாவில் 1, கேரளாவில் 1, மகாராஸ்திராவில்  1, தமிழ்நாட்டில் 1 மற்றும் ஒடிசாவில்  1.
இந்த பட்டியலில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
போலிப்பல்கலைகழகங்கள் முழுப் பட்டியல் :
டெல்லி (5):
1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி
2. யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி
3. வோகேஷனல் யுனிவர்சிட்டி
4. ஏடிஆர் செண்ட்ரல் ஜுரிசியல் யுனிவர்சிட்டி , ராஜேந்திரா ப்லேஸ், புதுதில்லி.110008
5. இந்தியன் சயன்ஸ் அண்ட் எஞ்சினீரிங்க், புது தில்லி.
உத்தரபிரதேசம் (09):

  1. வரனசேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா, வாரணாசி, ஜகத்பூரி, தில்லி.
  2. மகிளா கிராம் வித்யாபதி /விஸ்வவித்யாலயா பெண்கள் பல்கலைக்கழகம், அலகாபாத்.
  3. காந்தி ஹிந்தி வித்யாபித் , ப்ரயாக், அலகாபாத்.
  4. எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், கான்பூர், உத்திர பிரதேசம்.
  5. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலைக்கழகம்) , அசல்டல், அலிகார்க், உத்திர பிரதேசம்.
  6. உத்திர பிரதேச விஷ்வவித்யாலயா, கோசி கலான், மதுரா,  உத்திர பிரதேசம்.
  7. மஹாரானா ப்ரதாப் ஷிக்ஷா நிகேதன் விஷ்வவித்யாலயா, ப்ரதாப்கார்க்,  உத்திர பிரதேசம்.
  8. இந்திரப்ரஸ்தா ஷிக்ஷா பரிஷத், இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, கோடா, மக்கன்பூர், நோய்டா ஃபேஸ்-2, உத்திர பிரதேசம்.
  9. குருகுல் விஷ்வவித்யாலயா, விருந்தாவன், உத்திர பிரதேசம்.

மேற்கு வங்காளம்:
(1)  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அல்டர்நேடிவ் மெடிசின், கொல்கத்தா.
(2) இன்ஸ்டிட்யூட் ஆஃப் அல்டர்நேடிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச், 8-A, டைமன்ட் ஹார்பர் ரோட், பில்ட்டெக் இன், 2nd ஃப்லோர், தாகூர்புர்கூர், கொல்கத்தா-700063.
கர்நாடகா: (1) படகான்வி சர்கார் வர்ல்ட் ஓபன் பல்கலைக்கழகம் எடுகேஷன் சொசைடி, கோகக், பெல்காம், கர்நாடகா.
கேரளா: (1) செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷனாட்டம், கேரளா.
மஹாரஷ்ட்ரா(1): ராஜா அராபிக் பல்கலைக்கழகம், நாக்பூர், மஹாரஷ்ட்ரா.
பிகார்(1): மைதிலி பல்கலைக்கழகம்/ விஷ்வவித்யாலயா, தர்பங்கா, பிகார்.
ஒடிசா(1): நவபாரத் ஷிக்ஷா பரிஷத், அனுபூர்னா பவன், Plot No. 242, பானி டாங்கி ரோட், சக்திநகர், ரூர்கேலா-769014.
மாணவர்கள் ஏமாறாமல் தடுக்கும் பொருட்டு , மனிதவள மேம்பாட்டுத் துறை உலகம் முழுக்க உள்ள போலிப் பல்கலைக்கழக பட்டியலை கேட்டு வெளிவிவகாரத்துறைக்கு கடிதம் எழுதவுள்ளது.
“உங்கள் கல்லூரியை அறிந்துக் கொள்ளுங்கள்” எனும் அலைபேசி செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.