கோடைகாலம் வந்துவிட்டாலே  இந்த சீசனுக்கு மட்டும் கிடைக்க கூடிய சில பழங்கள் இருப்பது போலவே பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் இயற்கை முறையில் கிடைக்க கூடிய ஒரு  சைவ பானம். அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூற முடியும். இந்த பதநீரில், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் இருக்கிறது. கோடை காலத்தில் தாகம் தணிக்கவும் ஆரோக்கியத்துக்கு உகந்த பானம் இந்த பதநீர் ஆகும்.

வெயிலின் தாக்கத்தால் உடல் உஷ்ணம், நீர்கடுப்பு, மற்று பல உடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு  சிறந்த மருந்தாகும்.

பதநீர் நன்மைகள்;

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடு, கருப்பை சார்ந்த வலி,  வாய்வு , காட்டி ஆகியவற்றினால் உண்டாகும் பிரசனைகளை தீர்க்கிறது.

இரத்த கடுப்பு;

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து காலை,மாலை என இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி குடித்துவர  இரத்த கடுப்பு  மற்றும் மூல சூடு குறையும். அதேபோன்று மஞ்சளையும் பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் குணமாகும்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

சக்கரை 28 .8 கிராம்
காரம் 7 .௨ கிராம்
சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
பாசுபரசு 32 .4 மி.கிராம்
தயமின் 82 .3 மி.கிராம்
ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10 புரதம் 49 .7 மி.கிராம்
கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து அதிகமாக இருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் ஏற்படும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுவாக்குகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.

இதில் இருக்கும் இயற்கையாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை தூண்டுகிறது.