பெங்களூரு மென்பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக இருந்த உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷ் (34) கடந்த திங்கட்கிழமை (டிச. 9) தற்கொலை செய்து கொண்டார்.

சுபாஷ், தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் 24 பக்க தற்கொலைக் குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை வெளியிட்ட அவர் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் தவிர குடும்ப நீதிமன்ற நீதிபதி ஆகியோர் தன்னை இடைவிடாத துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியாரை கர்நாடக காவல்துறையினர் இன்று ஹரியானாவில் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் சட்டத்தின் உதவியுடன் ஆண்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்… டிரம்ப் மற்றும் எலன் மஸ்க்-கை டேக் செய்த பெங்களூர் மென்பொறியாளர்…