சமஸ்திபூர்
தற்கொலை செய்துக் கொண்ட பெங்க்ளூரு பொறியாளரின் அஸ்தியை கரைக்க அவரது தந்தை மறுத்துள்ளர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர், அவரது மனைவி வழக்குகள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாலும், ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தியதாலும் மனமுடைந்து சமீபத்தில் தற்கொலை செய்தார்.
அவர் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து வீடியோவும் பதிவு செய்து வைத்திருந்தார். அவற்றில், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். தனது மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதுல் சுபாஷின் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொறியாளரின் தந்தை பவன் குமார் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் செய்தியாளர்களிட்ம,
”எனது மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை நான் அவரது அஸ்தியை கரைக்கப்போவதில்லை பணத்திற்காக என் மகன் அவனது மனைவியால் துன்புறுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது இதுதான்.. தயவு செய்து எங்களுக்கு நீதி வழங்குங்கள்”
எனக் கூறி உள்ளர்.