தாளவாடி :

ரடங்கால் வேலையிழந்து விவசாய விளை பொருட்கள் வீணாகி மக்கள் அனைவரும் கஞ்சிக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கும் வேலையில்.

உணவு விநியோகம் மற்றும் நிவாரண உதவிக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து, உயிருக்கு போராடுபவன் உயில் எழுத வசதியாக பத்திரப்பதிவுத்துறையை திறந்து வைக்க நினைக்கும் அரசுகள் இருக்கும் நாட்டில், விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி. யின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள முட்டைகோஸ் விவாசியிகள் பலர் தங்கள் பயிருக்கு உண்டான விலை கிடைக்காமலும், வாங்குவதற்கு ஆள் இல்லாமலும் திண்டாடிவருகின்றனர்.

ஓட்டரஹல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணையன் தனது 3.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட 1 லட்சம் விளைந்த முட்டைகோஸை வாங்க ஆள் இல்லாமல், தனது சமூக வலைதள பக்கம் மூலம் இதனை படம்பிடித்து அனுப்பினார்.

கிலோ ஒன்றுக்கு ரூ. 1.50 முதல் 2.50 வரை தான் கிடைக்கும் என்றிருந்த நிலையில், 15 டன் முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50 கொடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடக அரசு பிரத்யேகமாக துவங்கியுள்ள விவசாய சந்தை மூலம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா. மேலும் அவரது தோட்டத்தில் மீதமுள்ள 70 டன் முட்டைகோஸ் சந்தைப்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தித்தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று கூறிய அண்ணாவின் பெயரால் கட்சியும் ஆட்சியையும் நடத்துபவர்களோ, தமிழக எல்லையிலிருந்து 3 கி.மீ. தள்ளியுள்ள விவசாயிகளை மட்டுமல்ல தங்கள் மாநில விவசாயிகளின் நலனையும் மாற்றுக்கட்சியினரின் ஆலோசனையையும் புறம்தள்ளிவருவது வினோதமாக உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=iPGDXy3ybh8]