கொல்கத்தா:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின்  திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது நாட்டிலேயே 2வது சட்டமன்ற உறுப்பினரின் உயிரிழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றன. மொத்த பாதிப்பை ஒப்பீட்டளவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என்றாலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 14,728 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்ட நிலையில், 4930 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 9218 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 580 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் (60வயது)  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்,

பால்டா தொகுதியில் இருந்து 3 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட கோஷ், கட்சியின் பொருளாளராகவும் 1998 முதல் இருந்துள்ளார். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் என்று மம்தா பாணர்ஜி நினைவு கூர்ந்துள்ளார்.

எம்எல்ஏ தமோனாஷ் கோஷ் மறைவுக்கு முதல்வர் மம்தா பாணர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் திமுக எமஎல்ஏ அன்பழகன் கொரோனாவால் பலியான நிலையில், 2வது எம்எல்ஏவாக மேற்கு வங்க மாநிலத்தில் தமோனாஷ் கோஷ்  பலியாகி உள்ளார்.