மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் முதல் கிராண்ட் சிலாம் தொடரில் பிரபல அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்-ஐ சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெலிண்டா பென்சி தோற்கடித்தார். இதன் காரணமாக முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் வெளியேறினார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கி உள்ள இந்த போட்டி வரும் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று தொடங்கிய பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பிரபல அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும், அவரை எதிர்த்து சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கும் களமிறங்கினர்.
விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆவேசமாக ஆடி வந்த சுவிட்சர்லாந்து வீராங்கனை பென்சி, வீனஸ் வில்லியம்சை திக்குமுக்காட செய்து முதல்சுற்றை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி னார்.
இதனால் வெகுண்டெழுந்த வீனஸ் ஆவேசமாக இரண்டாவது சுற்றை விளையாடினார். இருந்தாலும் பென்சியின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக 2வது சுற்றையும் வில்லியம்ஸ் பறிகொடுத்தார். 7-5 என்ற கணக்கில் பெலிண்டா பென்சிக் வென்றார்.
இதன் காரணமாக முதல் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.