பிரஸ்ஸல்ஸ்
க்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.
சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி புள்ளிவிவரங்களின்படி,  8.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை, பெல்ஜியம் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 1,217,473 கொரோனா பாதிப்புகளையும், 25,494 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாக சயென்சானோ நிறுவனம் தெரிவித்துள்ளது.