
டில்லி,
மத்திய அரசு சமீபத்தல் அறிவித்துள்ள இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்தது. பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடைகள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக ஐதராபாத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]