
சென்னை:
மாடு இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்தியஅரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மகளிர் அணியினர், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, மா.சுப்பரமணியன், அன்பழகன், மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel