பியூட்டிஷியன் ஹேமாவதி பாண்டியன்  அளிக்கும் அழகு குறிப்புகள்:

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலத்தில்,  உடலில் உள்ள பழைய செல்கள் உதிர்வது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இதனால் பல மாற்றங்கள் – பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படும் முகத்தில் பிசுபிசுப்பான தன்மை ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தும்.பருக்கள் உருவாகியும் தொல்லை கொடுக்கும்.. உடலில் அதிகப் படியான வியர்வையால் துர்நாற்றம் வீசும். மூடி உலந்து உதிர்தல் அதிகரிக்கும்.உடல் உஷ்ணமும் அதிகமாகும். குதிகால்  வெடிப்பு ஏற்படும்.

இதனை தடுக்க நாம் அழகு நிலையம் சென்று தகுந்த தீர்வு காணலாம் என்றாலும், நாமே சில ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.

நம் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பேஷியல் சிறந்த பலன் தரும். பேஷியல் மூலம் கொடுக்கும் மாசாஜ் பிரஷர் இது நம்முடைய உடலில் இரத்த அழுத்தம் சமச்சிராக்குகிறது. முகத்துக்கு இரத்த ஓட்டம் சீறாககிடைக்கும். இதனால்  முகம் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் காணப்படும்.

பார்லர் சென்று பேஷியல் செய்தபின் வீட்டிலும் முகத்தை பராமரிக்க வேண்டும்.  சதைப்பற்றுள்ள பழங்கள், கடலைமாவு,பச்சைபருப்பு மாவு இதனை கலந்து  முகத்தில் பூசிவர முகம் பளபளப்பாக இருக்கும்.

இப்போது ரோமங்கள் குறித்த பிரச்சினைக்கு  வருவோம். உடலில் உள்ள தேவையற்ற ரோமங்கள் வெயில் காலத்தில் அதிக வேயர்வையால் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கும்.

தேவையற்ற முடிகளை ஷேவிங் செய்து கொள்வது, க்ரீம் அப்ளை செய்து முடியை நீக்குவது ஆகியவை உடலுக்கு கேடானது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இப்படி முடியை முழுதும் நீக்குவதால் தோல் கருத்து, சொரசொறரப்பாகவும் தடித்தும் ஆகிவிடும்.

ஆகவே முடிகளை  நீக்க முறையான வழிகளையே  பின்பற்ற வேண்டும். ஆம்… பியூட்டி பார்லர் சென்று வாக்சிங்  (waxcing) மூலம்  முடிநீக்கம் செய்வதே சிறந்தது. இதனால்  நம்முடைய  தோல்கள்  பளபளப்பகவும் பொலிவுடனும் காணப்படும். இதுவே சரியான வழிமுறையும் ஆகும். இதனால் உடலில் துர்நாற்றம் அதிகம் வராது.

முக்கியமான விசயம்.. முடிந்தவரை முடியை முழுவதுமாக ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்வதே நல்லது. தோலுக்கு ஆபத்தில்லாதது.

முடி உதிர்வதை தடுத்துக் கொள்வது எப்படி?

காலையில் எழுந்தவுடன் தயிரில் கருவேப்பிலை இரண்டும் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் முடி உதிர்வது நிற்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

பித்த வெடிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

கால்களை சுடுதண்ணீரில் 15 நிமிடம் ஊர வைத்து ஸ்கிரப் போட்டுசுத்தம் செய்யவேண்டும். இதனால் கால் வெடிப்பு குறையும். இதை பார்லர் சென்று செய்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். அங்கு மசாஜ்,பிரஷர் கொடுக்கப் படுகிறது. இதனால் கால்வலி, மூட்டு வலி, இரத்த ஓட்டம் சீராகி வலி குறையும்.ஸ்கிரப் மூலம் வெடிப்பும் குறையும்.

கோடையில் துர்நாற்றம் வராமல் இருக்க’

பெண்கள் குளிக்கும் போது ஜவ்வாது பவுடரை தண்ணீரில் சேர்த்து குளித்து பிறகு கஸ்தூரி மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிப்பதன் மூலம அன்று முழுவதும் உடல் வாசனையாகவும்,துர்நாற்றம் இல்லாமலும் புத்துணர்வாகவும் வைத்துக்கொள்ளலாம்.

ஹேமாவதி பாண்டியன்

ஆண்கள் குளிக்கும் முன்பு சந்தனத்தை உடல் முழுவதும் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஜவ்வாது பவுடரை தண்ணீரில் கலந்து குளித்து வரலாம். இதனால் உடலுக்கு குளிர்ச்சையும், புத்துணர்வாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் இது நல்லது.

 

இன்னொரு முக்கிய விசயம்.

உடலின் வெளிப்புற தோற்றத்தை பராமரிபதற்கு முன்பு உடலில் உள்புறத்தையும்  பராமரிக்க வேண்டும்.  காலையில் எழுந்தவுடன்  பீட்ரூட் ஜுஸ் குடிக்கலாம். இதன்  மூலம்  உடலில் இரத்தம் சுத்தம் செய்யபடுகிறது. இதனால் உடல் சிவப்பு நிறத்தை மெல்ல மெல்ல அடையும். பொலிவுடன் இருக்கும்.

(தொடரும்)