இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் துவங்குகிறது.

பாகிஸ்தான் தரப்பில் ஆயுதமேந்திய வீரர்களுடன் கைகுலுக்கவோ அல்லது எல்லை வாயில்கள் திறக்கப்படுவதோ இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இருப்பினும், பார்வையாளர்கள் இந்த விழாவைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்கு மத்தியில் 12 நாள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு துவங்கும் இந்த நிகழ்ச்சி அமிர்தசரஸ் அருகே உள்ள அட்டாரி எல்லை, ஃபெரோஸ்பூரில் உள்ள ஹுசைனிவாலா எல்லை, ஃபாசில்காவில் உள்ள சத்கி எல்லை ஆகிய மூன்று எல்லை வாயில்களில் மாலை 6 மணிக்கு நடைபெறும்.

அமிர்தசரஸ் அருகே இரு நாடுகளின் எல்லைகளில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், பீட்டிங் ரிட்ரீட் எனும் இந்த வகையான விழா, 1959 முதல் அந்தி சாயும் முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் இறக்கி இராணுவப் பயிற்சி செய்து வருகிறது.

இரு தரப்பு எல்லைக் காவலர்கள் வழக்கமாக தீபாவளி மற்றும் ஈத் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் இனிப்புகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.

அமிர்தசரஸிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும், பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 22 கி.மீ தொலைவிலும் உள்ள அட்டாரி-வாகா கூட்டு சோதனைச் சாவடி, கொடி இறக்கும் விழாவைக் காண கிட்டத்தட்ட 25,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கேலரியைக் கொண்டுள்ளது.

சாதாரண சந்தர்ப்பங்களில், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் விழாவைக் காண கூடுகிறார்கள்.

தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் இன்று முதல் மீண்டும் துவங்கும் இந்த நிகழ்ச்சியைக் காண உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சத்கி எல்லையில் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியைக் காண உள்ளூர்வாசிகள் மாலை 5.30 மணிக்குள் சத்கியை அடையுமாறு எல்லைப் பகுதி மேம்பாட்டு முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.