ஹவாய்: தனது சமீபத்திய சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது தேனீ ஒன்றால் கொட்டப்பட்ட பியர் கிரில்ஸின் கண்கள் வீங்கிப்போய் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பசிஃபிக் பெருங்கடலில் உள்ள டிரஷர் தீவு தொடர்பான ஒரு ‘உயிர்வாழும் கலை’ நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது, தேனீயால் கண்ணில் கொட்டுபட்டார் பியர் கிரில்ஸ்.
இதனையடுத்து, அவரின் கண் வீங்கியது. எனவே, அவருக்கு அலர்ஜி தொடர்பான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் ஆபத்தான விஷயங்களுடன் விளையாடுவதையே விருப்பமாகக் கொண்ட கிரில்ஸ், ஏற்கனவே தேனீ கடி தொடர்பான சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ‘போர்ன் சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியை ஷுட்டிங் செய்தபோது, இதேபோன்று தேனீ கடியில் சிக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி நேரிட்டது.
அந்நிகழ்ச்சியில் அவர் புகையை உண்டாக்கி, தேனீக்களை விரட்டி, அதன்மூலம் தேன் எடுக்க முயன்றபோது தேனீ கடிக்கு உள்ளானார். அதேபோன்றதொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.