புது டெல்லி:
ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த வழக்கறிஞர் மனன்குமார் மிஸ்ரா, சி.ஜே.ஐ எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்த பின்னரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகளைத் தொடர வேண்டும் என்று சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த வழக்கறிஞர் மனன்குமார் மிஸ்ரா, சி.ஜே.ஐ எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில், ஊரடங்கு முடிந்த பின்னும் இதுபோன்ற நடைமுறைகள் தொடர்ந்தால், 95 சதவிகித வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தின் நடைமுறை வழக்கறிஞர் குழுவில் மட்டுமே இருக்கும் என்றும், நீதி வழங்கல் முறை மோசமாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “இதுபோன்ற காலங்களில் தொழில்நுட்பம் மற்றும் வீடியோ கான்பிரன்சிங் போன்ற விசாரணைகளை மேற்கொள்வது அவசியமான ஒன்று தான் என்றாலும், ஊரடங்கு முடிந்த பின்னர் இந்த நடைமுறையை விரிவாக்குவது என்பது நடைமுறைக்கு மாறான சிந்தனை என்றும் தெரிவித்துள்ளார்.
பல மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கூட, இந்தியாவின் உண்மையான நிலையை அறியாமல் இது போன்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஒரு முழுமையான வளர்ந்த தேசத்திற்காக அல்லது இந்தியாவைத் தவிர வேறு ஏதேனும் ஒரு நாட்டில் இதுபோன்ற யோசனைகளைச் செயல்படுத்த திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.
திறந்த நீதமன்றங்களில் தான், நீதிமன்ற நடைமுறைக்கு அதன் சொந்த மதிப்புகள் மற்றும் முக்கியத்துவம் இருப்பதாகவும், வீடியோ கான்பரன்சிங் ஒருபோதும் திறந்த நீதிமன்ற நீதித்துறை செயல்பாடுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்றும் மனன்குமார் மிஸ்ரா உறுதிபட குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்வியைப் பற்றி எடுத்துக் கொண்டால், ஆன்லைன் வகுப்புகள் வழியாக சட்டக் கல்வியைத் தொடர சட்டப் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு விதி அல்ல, விதிவிலக்கு. நீதிமன்ற அறைகள், வக்கீல் அறைகள், சட்ட நிறுவனங்கள் போன்றவற்றில் பயனுள்ள இன்டர்ன்ஷிப் மற்றும் நடைமுறை பயிற்சி ஆகியவற்றுடன் வகுப்பு அறை போதனைகள் இல்லாவிட்டால் சட்டக் கல்வி முடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஊரடங்கு காரணமாக பல வழக்கறிஞர்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி, கடினமான நிலைக்குச் சென்று விட்டதாகவும், இது தொடர்பாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ எந்த உதவியும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பி.சி.ஐ. பி.சி.ஐ மற்றும் மாநில பார் கவுன்சில்கள் மற்றும் பார் அசோசியேஷன்கள் தங்களால் முடிந்த உதவியை பாதிகப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு செய்து வருவதாகவும் கூறினார்.
ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டால், நீதிமன்றங்களின் செயல்பாட்டை படிப்படியாக மீட்டெடுக்க ஒரு பாதுகாப்பான முறையைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.