சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவலில்  தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலை யில், பல்வேறு மருந்துகள் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில்,   பிசிஜி (Bacillus Calmette–Guérin) என்ற தடுப்பூசி வகையான மருந்தினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
பிசிஜி  சிகிச்சையானது பல வெளிநாடுகளில்  நல்ல பலனை வழங்கி வருவதால் தமிழகத்திலும் செயல்படுத்து குறித்து  ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது சோதனை முறையில் பிசிஜி தடுப்பூசியை கொரோனா நோயாளிகளுக்கு போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி
பி.சி.ஜி, அல்லது பேசிலஸ் கால்மெட்-குய்ரின், காசநோய்க்கான தடுப்பூசி ஆகும்.  இந்த பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுவதாக  ஜான்ஸ் ஹாப்கின்ஸின்  விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் இறப்பு விகிதம் 5.8 மடங்கு குறைவாக இருப்பதாக கூறி உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்தை சோதனை அடிப்படையில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.