டெல்லி: இந்தியாவில் மாநிலங்களின் சார்பில், ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கான மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்ற நிலையில், மகளிர் பிரீமியர் லீக் லோகோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பெண்கள் கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஐபிஎல்லைப் போல டபிள்யூபிஎல் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன் மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டபிள்யு பிஎல் போட்டிகள், அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர்.
இந்த அணிகளுக்காக விளையாடும் வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கும் நிகழ்வு, இன்று மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஏலத்தின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசன் உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டபிள்யு பிஎல் போட்டிகளில் பங்கேற்குத்ம ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஏலம் போட்டியில், பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ.3.4 கோடிக்கு வாங்கியது. மற்றொரு வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் அணி வாங்கி உள்ளது
முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள்:
ஸ்மிருதி மந்தனா – ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
ஹர்மன்பிரீத் கவுர் – ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
சோபி டிவைன் ரூ.50 லட்சம் – (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
ஹெய்லி மேத்யூஸ் – 40 லட்சம் அடிப்படை விலை
ஆஷ்லீ கார்ட்னர் – ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)
சோபி எக்லெஸ்டோன் – ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)
எல்லிஸ் பெர்ரி – ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
ராதா யாதவ்: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 40 லட்சம்)
ஷிகா பாண்டே: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 60 லட்சம்)
சினே ராணா: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ. 75 லட்சம்)
மரிசேன் கேப்: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 1.5 கோடி)
பார்ஷவி சோப்ரா: UP வாரியர்ஸ் (ரூ 10 லட்சம்)
டைட்டாஸ் சாது: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 25 லட்சம்)
ஸ்வேதா செஹ்ராவத்: UP வாரியர்ஸ் (ரூ 40 லட்சம்)
எலிஸ் பெர்ரி: RCB (ரூ 1.70 கோடி)
தீப்தி சர்மா: UP வாரியர்ஸ் (ரூ 2.60 கோடி)
ரேணுகா சிங்: ஆர்சிபி (ரூ 1.50 கோடி)
நடாலி ஸ்கிவர்: மும்பை இந்தியன்ஸ் (ரூ 3.20 கோடி)
தஹ்லியா மெக்ராத்: UP வாரியர்ஸ் (ரூ 1.40 கோடி)
பெத் மூனி: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ 2 கோடி)
ஷப்னிம் இஸ்மாயில்: UP வாரியர்ஸ் (ரூ 1 கோடி)
அமெலியா கெர்: மும்பை இந்தியன்ஸ் (ரூ 1 கோடி)
சோபியா டன்க்லி: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ 60 லட்சம்)
ஜெமிமா ரோட்ரிக்ஸ்: டெல்லி கேப்பிடல்ஸ் (2.20 கோடி)
மெக் லானிங்: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 1.1 கோடி)
ஷஃபாலி வர்மா: டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 2 கோடி)
அன்னாபெல் சதர்லேண்ட்: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ. 70 லட்சம்)
ஹர்லீன் தியோல்: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ 40 லட்சம்)
பூஜா வஸ்த்ரகர்: மும்பை இந்தியன்ஸ் (ரூ 1.9 கோடி)
டீன்ட்ரா டாட்டின்: குஜராத் ஜெயண்ட்ஸ் (ரூ 60 லட்சம்)
யாஸ்திகா பாட்டியா: மும்பை இந்தியன்ஸ் (ரூ 1.5 கோடி)
ரிச்சா கோஷ்: RCB (ரூ 1.9 கோடி)
அலிசா ஹீலி: UP வாரியர்ஸ் (ரூ 70 லட்சம்)
அஞ்சலி சர்வானி: UP வாரியர்ஸ் (ரூ 55 லட்சம்)
ராஜேஸ்வரி கயக்வாட்: UP வாரியர்ஸ் (ரூ 40 லட்சம்)