இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்குவதாக இருந்தது.

38 அணிகள் பங்குபெறும் இந்த போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ரஞ்சி போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பது இளம் வீரர்களின் திறமையை அறிந்துகொள்ளவும் இந்திய அணியை பலப்படுத்தக் கூடிய வீரர்களை தேர்வுசெய்வதிலும் தாமதம் ஏற்படும் என்பதால் இந்த போட்டிகளை நடத்தாமல் இருப்பது நல்லதல்ல என்று அணியின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் சுற்றுப்போட்டிகளை நடத்துவது என்றும் ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பின் ஜூன் மாதத்தில் நாக்-அவுட் சுற்று போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக அதன் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.