சென்னை :
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் போட்டியின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி மார்ச் 28 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதில், அகமதாபாத்தில் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க இருக்கிறது, இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி சென்னையில் பிப் 5 ம் தேதி நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தொடங்குகிறது, இரண்டாவது போட்டி சென்னையில் பிப் 13 ம் தேதி நடைபெறும்.
இது குறித்த விரிவான அட்டவணை :
தேதி | இடம் | |
டெஸ்ட் தொடர் | ||
1 | பிப்ரவரி 5 – 9 | சென்னை |
2 | பிப்ரவரி 13 – 17 | சென்னை |
3 | பிப்ரவரி 24 – 28 | அஹமதாபாத் – பகலிரவு |
4 | மார்ச் 4 – 8 | அஹமதாபாத் |
டி-20 | ||
1 | மார்ச் 12 | அஹமதாபாத் |
2 | மார்ச் 14 | அஹமதாபாத் |
3 | மார்ச் 16 | அஹமதாபாத் |
4 | மார்ச் 18 | அஹமதாபாத் |
5 | மார்ச் 20 | அஹமதாபாத் |
ஒருநாள் சர்வதேச போட்டி | ||
1 | மார்ச் 23 | புனே |
2 | மார்ச் 26 | புனே |
3 | மார்ச் 28 | புனே |
2019 டிசம்பரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டி தான் சென்னையில் நடைபெற்ற கடைசி போட்டி, இதற்கு முன், 2016 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சென்னையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், சென்னையில் நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இருந்தபோதும், கொரோனா காரணமாக இது ரசிகர்கள் யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.