டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் போட்டிகள் 2025 மார்ச் 14ம் ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், அடுத்த 3 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி,
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும்,
2027ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம், இந்த ஆண்டு சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலமான நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில், கலந்துகொள்ள மொத்தம் 574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானை தவிர மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎலில் விளையாட தங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்று தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து தங்களுக்க தேவையான வீரர்களை ஐபிஎல் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்க உள்ளது.