டில்லி,
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாக பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாக நீக்கியுள்ளது உச்ச நீதி மன்றம்
கிரிக்கெட்ட் வாரியத்தில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் குறித்தும், பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை வரையறுக்கவும் நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது.
அந்த கமிட்டி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கமிட்டியின் பரிந்துரை களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியிருந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றமும் லோதா கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த பிசிசிஐக்கு உத்தரவிட்டது.
ஆனால், லோதா கமிட்டி பரிந்துரைகளை பிசிசி தலைவர் அனுராக் தாகூர் செயல்படுத்தவில்லை என அவர்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றிய புகார் காரணமாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே பலமுறை எச்சரித்தது. ஆனால், அதை பிசிசிஐ கண்டுகொள்ளாததால் இன்று அதிரடியாக பிசிசிஐ தலைவரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இன்று பிசிசிஐ தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர்,செயலாளர் அஜய் சிர்பே ஆகியோரை அதிரடியாக நீக்கி அறிவித்தது.
மேலும் நீதிமன்றத்தில் பொய்யான தகவலை அளித்தது, ஐசிசி க்கு எழுதிய கடிதத்தை மறைத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டதக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ யின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு 2 ஆலோசகர்களையும் உச்சநீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
லோதா பரிந்துரையை பிசிசிஐ, மாநில கிரிக்கெட் வாரியம் கடைப்பிடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கூறியுள்ளது..
மேலும் பிசிசிஐயின் புதிய தலைவர், செயலாளர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.