ந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிக இளம் வயது தலைவர் என்கிற பெருமையுடன்  பொறுப்பற்ற அனுராக் தாக்கூர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் சமீபத்தில்  ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.  அந்த அமைப்பின் விதிப்படி ஜசிசி சேர்மன் பதிவி வகிப்பவர்கள்  கிரிக்கெட் வாரியத்தில் வேறு எந்த பொறுபப்பிலும் இருக்கக் கூடாது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
a
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில்  நடைபெற்றது. இதில் பிசிசிஐ செயலாளராக இருந்த அனுராக் தாக்கூர், புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து, காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு, மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜய் ஷிர்கேவை தேர்வு செய்ய அனுராக் தாக்கூர் முன்மொழிந்துள்ளார். 41 வயதான அனுராக் தாக்கூர், பிசிசிஐயின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.