மும்பை:
பிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சில அணிகளின் வீர்ரகள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று எற்பட்டதால், அப்போட்டி ர செய்யப்பட்டது. பல ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபிஎல் போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதால் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிசிசிஐ இன் அடுத்த தேர்வாக உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் மே 29ம் தேதி நடக்கவுள்ளது. அதில் ஐபிஎல் தொடர் எங்கு நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை தான் பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஐபிஎல்- இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. மீதம் 31 போட்டிகள் உள்ளன. இவற்றை செப்டம்பர் – அக்டோபர் மாத இடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பயோ பபுள் முறையில் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மே 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.