சென்ன‍ை: தமிழ்நாடு அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு, தனது ஒப்புதலை அளித்துள்ளது பிசிசிஐ அமைப்பு.

இந்தப் போட்டித் தொடர், ஒரு மாதம் நடைபெறக்கூடியதாகும். இந்தாண்டு ஜூன் 4 முதல் ஜூலை 4ம் தேதி வரை, இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

ஜூன் 4ம் தேதி, திருநெல்வேலியில், இந்தப் போட்டித் தொடர் துவங்குகிறது. அதேசமயம், இத்தொடரின் இறுதிப்போட்டி, ஜூலை 4ம் தேதி, சேலத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா தீவிரம் காரணமாக, டிஎன்பிஎல் தொடருக்கு, அனுமதி வழங்கப்படுமா? என்று சந்தேகம் நிலவிய நிலையில், தற்போது அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ அமைப்பு.