மும்பை: அமீரக நாட்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 தொடரின் மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “கடந்த தொடருடன் ஒப்பிடுகையில், இந்தமுறை 35% அளவிற்கு செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்படியிருந்தும், ரூ.4000 கோடி வரை வருவாய் கிடைத்தது.
போட்டியை, தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கையும் 25% கூடியுள்ளது. மும்பை – சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை, முன்னெப்போதும் இல்லாதததைவிட அதிகம் பேர் கண்டு ரசித்தனர்.
பல சவால்களுக்கு மத்தியில், ஐபிஎல் தொடரை நடத்தி, எங்களின் திறனை நிரூபித்துள்ளோம். இத்தொடர் நடத்தப்படாமல் போயிருந்தால், கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஒரு ஆண்டு விளையாட்டு வாழ்வை இழந்திருப்பர்” என்றுள்ளார் அவர்.