வங்கக்கடலில் புயல் சின்னம்: இரண்டு நாட்களுக்கு மழை!

Must read

சென்னை:
ங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் , மத்திய மேற்குவங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்  என கூறியுள்ளார்.
rain1
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 7 செ.மீ. மழையும், காட்டு மன்னார்கோயிலில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article