சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள் தேவைப்படுவதாகவும், அவர்களுக்கு பேசிக் சம்பளம் ரூ.56100 நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்கள் தோறும் உள்ள ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவர்கள் இன்றி முடங்கி கிடக்கிறது. அவைகளில் மருத்துவர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி உள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 500 புதிய மருத்துவர்களை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு அடிப்படை சம்பளம் : ரூ. 56100 நிர்ணயித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]