சென்னை:
பார் கவுன்சில் நிர்வாகிகள், பார் கவுன்சில் தேர்தலில் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட க்கூடாது என்று விதிகளை திருத்தி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

தமிழ்நாடு பார் கவுன்சில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மீண்டும் போட்டியிட தடை செய்து விதிகள் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளை எதிர்த்து, சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நீதியரசர் கிருபாகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் சரியே என்றும், சங்க நிர்வாகிகள் இரண்டு முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தது.
[youtube-feed feed=1]