இஸ்லாமாபாத்
பாகிஸ்தான அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தவா உள்ளிட்ட இயக்கங்கள் அதே தலைமையின் கீழ் வேறு பெயரில் இயங்கி வருகிறன.
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹஃபீஸ் சையத் நடத்தி வந்த லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த இயக்கம் ஜமாத் உத் தவா என்னும் பெயரிலும் ஃபலா ஈ இன்சானியத் ஃபவுண்டேஷன் என்னும் பெயரிலும் இயங்கி வந்தன. இந்த இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
அதை ஒட்டி பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த இரு இயக்கங்களும் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனால் அந்த தடை என்பது வெறும் பேச்சளவுக்குத் தான் எனவும் முழுமையானதடை இல்லை எனவும் பல சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்த ஊடகங்கள் கூறும் தகவல்கள் பின் வருமாறு
ஹஃபீஸ் சையத் நடத்தி வந்த ஜமாத் உத் தவா மற்றும் ஃபலா ஈ இன்சானியத் ஃபவுண்டேஷன் ஆகிய இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான அரசு தடை செய்தது. அந்த இயக்கத்தின் பல அலுவலகங்கல் நாட்டின் பல நகரங்களில் முக்கிய சாலைகளின் உள்ளன.
அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் அலுவலகங்கள் இயங்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. முன்பு இங்கிருந்த அனைவரும் அங்கேயே உள்ளனர். ஒரே மாற்றம் என்னவென்றால் அலுவலகங்களின் பெயர் பலகைகள் மற்றும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த இயக்கங்கள் தற்போது ”அல் மதினா” மற்றும் ”ஐசர் ஃபவுண்டேஷன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. முன்பு போலவே இந்த இயக்கங்கள் மக்களிடம் இருந்து தொடர்ந்து உண்டியல் மூலம் நன்கொடைகள் வசூலித்து வருகின்றன. இந்த உண்டியல்களின் ஏழை மக்களுக்கு உதவி நிதி என்னும் பெயர் பலகை காணப்படுகிறது.
இது குறித்து இந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர், “எங்களுக்கு அரசின் ஆதரவு உள்ளது. எனவே நாங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டு தொடர்ந்து இயங்கி வருகிறோம். தற்போதைக்கு எங்கள் தலைவர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்கள் இருக்குமிடம் அரசுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.